கீழக்கரை நகராட்சியின் மெத்தனப்போக்கு.. பொதுமக்கள் அவதி…

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். கீழக்கரையில் பொதுமக்கள் மற்றும் வாகனம் அதிகம் செல்லும் பிரதான சாலையான வடக்குத்தெரு சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள சாலையில் அரசு மருத்துவமனை குழந்தைகள் மருத்துவமனை பல் மருத்துவமனை என பல மருத்துவமனைகளும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் கடைகளில் உள்ள பகுதியாகும் பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் குழாய் அமைப்பதாக கூறி சாலையைத் தோண்டப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறாமல் சாலையை கயிர் மூலம் கட்டி வாகனத்தை முன்னூறு நானூறு மீட்டர் சுற்றி விடப்பட்டுள்ளது. எனவே அவசர சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்த கழிவுநீர் குழாய் சரி செய்யாததால் 20வது வார்டுக்கு உட்பட்ட பல இடங்களில் கழிவுநீர் வெளியேறி பல நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இதைப்பற்றி கீழக்கரை நகராட்சி பொறுப்பு ஆணையாளர் தனலட்சுமியிடம் பல சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தும் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு புதிய நோய்கள் வரும் என்ற அபாயம் அதிகளவில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதியில் கழிவுநீர் குழாயை சீரமைத்து சாலையை சரி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!