மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நலையில் இந்த கிராமத்தில் சுமார் 10 தெருக்களில் எந்த தெருக்களுக்கும் சாக்கடை வசதி இல்லை. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தெருக்களிலேயே தேங்கி கிடக்கின்றது.
இந்நிலையில் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சாக்கடை நீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சாக்கடை வசதியை செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





You must be logged in to post a comment.