உசிலம்பட்டி பிஆர்சி பணிமனை அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாக்கடைநீர் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் அமைந்துள்ளது பிஆர்சி பணிமனை. இந்நிலையில் உசிலம்பட்டி கீழப்புதூரில் உள்ள சாக்கடைநீர் அனைத்தும் செல்ல வழியில்லததால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி ஆற்று வெள்ளம் போல் செல்கிறது. இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகினறனர்.

இந்நிலையில் வழக்கம்போல் தேசிய நெடுஞ்சாலையில் சாக்கடைநீர் சென்றுகொண்டிருந்த நிலையில் பைக் மீது கார் மோதியது. பின்பு ஒன்றன் பின் தொடர்ந்து 2 வாகனங்கள் மோதிகொண்டது. இதில் காரின் நம்பர்பிளேட் பகுதி சேதமானது. பைக்கின் முன்பகுதி சேதமானது. இதனால் சுமார் அரைமணி நேரம் போகு;குவரத்து பாதிக்கப்பட்டது. சாக்கடைநீர் செல்லும் வாய்க்காலை நகராட்சி அதிகாரிகள் சுத்தம் செய்யாமல் இருப்பதே இந்த விபத்து காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் இது போன்று தேசிய நெடுஞ்சாலையில் சாக்கடைநீர் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த உசிலம்பட்டி அதிமுக நகரச்செயலாளர் கே.பூமாராஜா வீட்டின் முன்பு சாக்கடைநீர் தேங்கி விபத்து ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!