கீழக்கரையில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வாருகால் மூடிகள்..

கீழக்கரை குத்பா பள்ளியில் இருந்து (குயின் டிராவல்ஸ் அருகே) நடுத்தெரு போகும் பாதையில் வாருகால் மூடிகள் ஆபத்தான வகையில்  திறந்த நிலையில் உள்ளது. இது பிரதான சாலையாக இருப்பதால், சமீபத்தில் யாத்ரிகர் சிலரும் இதை கவனிக்காது வந்த ஒரு மீன் வியாபாரி ஒருவருர் மீன்கள் தராசு மற்றும் வாளியுடன் விழுந்து விட்டார். அதே போல் சமீபத்தில் பெண்மணி  ஒருவரும் இதில் விழுந்து  மருத்துவமனைக்கு செல்லும் நிலையானது.

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனே அவசர பிரச்சினையாக கையில் எடுத்து உடனடி தீர்வு காண வேண்டும், இல்லையெனில் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கும் சூழல் ஏற்படும். இதற்கு நிரந்தர தீர்வாக இப்பாதை  கனரக வாகனங்களும் உபயோகிப்பதால் அதன் முகப்பில் தரமான மூடியை நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உடன் செய்ய வேண்டும்.

தகவல்: மக்கள் டீம்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!