பள்ளிக்கு செல்லும் ஆபத்தான வகையில் உடைந்த வாருகால் மூடி.. பல மாதங்களாக உறக்கத்தில் நகராட்சி.. ஒப்பந்தக்கார்களை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள்..வீடியோ தொகுப்பு..

கீழக்கரை ஐந்தாவது வார்டு பகுதியில் ஹைரத்துல் ஜலாலியா பள்ளிக்கு செல்லும் வழியில், வாருகால் மூடி உடைந்து அவ்வழியாக செல்லும் பாதசாரிகளுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல மாதங்களாக சரி செய்யாமலே கிடக்கிறது.  இது சம்பந்தமாக இணையதளங்களிலும், நகராட்சியிலும் நேரடியாக புகார் செய்தும் பலன் ஏதும். ஏற்படவில்லை.

இது சம்பந்தமாக ஐந்தாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில், இந்த வாருகால் மூடி பல மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்தது, பின்னர் அருகில் உள்ள தற்காலிக ஆட்டோ நிலையத்தினர், அந்த இடத்தில் மணகளையும், கற்களையும் வைத்து மூடினார், இதனால் கழிவு நீர் சுத்தமாக அடைபட்டு அப்பகுதி வீடுகளில் சாக்கடை நீர் வீட்டின் உள்ளே செல்லும் நிலை உருவானது.  (வீடியோ காணவும்)

இதற்காக நகராட்சி இரண்டு ஒப்பந்தக்காரர்களுக்கு பணி வழங்கியும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.  இறுதியாக சிவா என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.  ஆனால் எந்த காரணமும் இல்லாமல் அவரும் ஒரு மாதத்திற்கு மேலாக பணிகள் செய்யவில்லை.  இதைப் பற்றி விசாரிக்கவும் எந்த அதிகாரிகளும் தயார் இல்லை.  இதனால் நகராட்சியின் பல லட்சம் நிதி வீணாகிறது. ஓப்பந்தகாரர்களை கண்டித்து வேலையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டுவது ஏன் என்பது புரியவில்லை” என வருத்தத்துடன் கூறி முடித்தார்.

ஆனால் தற்சமயம் புற்று நோய் போல் இங்கு ஏற்பட்ட அடைப்பால் நான்கு மற்றும் மூன்றாவது வார்டு பகுதிகளிலும் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.  இப்பொழுதாவது நகராட்சி கண் விழித்து, மக்கள் நலன் காக்குமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!