உசிலம்பட்டியில் 10 நாள் கூட தாங்காத சாக்கடை கால்வாய்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கிலிருந்து மாதரை வரை மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக உசிலம்பட்டி நகர் பகுதியில் மதுரை-தேனி ரோட்டில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 2 கி.மீ தூரம் வரை கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் மதுரை ரோட்டிலுள்ள பிஆர்சி பணிமனை அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டிலை இறங்குவதற்காக சரக்கு லாரி ஒன்று பாரின் முன் உள்ள சாக்கடை கால்வாய் முன் திரும்பி நின்றது.ஆனால் லாரியின் பாரம் தாங்காமல் கால்வாய் உடைந்து லாரி டயர் சாக்கடைக்குள் மாட்டியது.சாக்கடை கால்வாய் போடப்பட்டு 10 தினங்களே ஆன நிலையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் லாரியின் பாரம் தாங்காமல் கால்வாய் உடைந்ததால் ஒப்பந்ததாரர்கரின் உதவியாளரிடம் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டி முடிக்கப்பட்ட 10 நாளில் சாக்கடை கால்வாய் உடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!