இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவி, இலவசமாக கண்சிகிச்சை அளித்தவரும், உலக புகழ் பெற்ற கண் மருத்துவ மேதை என்று அழைக்கப்படுபவர் மருத்துவர் ஜி.வெங்கடசாமி. இவருக்கு எட்டயபுரம் அருகேயுள்ள அயன்வடமலாபுரம் தான் சொந்த ஊர்.
இவருடைய 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான அயன்வடமலாபுரத்தில் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அரவிந்த கண்மருத்துமனை தலைவர் மருத்துவர் சீனிவாசன், துணை தலைவர் நாச்சியார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 100க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் கலந்து கொண்டு, கண் மருத்துவத்தின் முக்கியத்துவம், மருத்துவர் ஜி.வெங்கடசாமியின் கண் மருத்துவசேவை குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட கோலாட்டம் மற்றும் பஜனை நடைபெற்றது.
இதில் கரிசல் மண் விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











