இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !

இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!