இராமேஸ்வரத்தில் மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கணவர், அவரது தாயார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி வெள்ளிமாசிவலசையைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் மாரீஸ்வரனுக்கு, நதியாவுக்கும் 2013 பிப்ரவரி 20ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 35 பவுன் நகை, ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் சீர் பொருட்கள் வரதட்சணை வழங்கப்பட்டது. திருமணமாகி 2 மாதங்கள் ஆனதும்மேலும் பணம் வாங்கி வர வேண்டும். இல்லையே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக நதியாவிற்கு மாரீஸ்வரன் மிரட்டல் விடுத்தார்.
நதியா புகார்படி மாரீஸ்வரன், உடந்தையாக செயல்பட்டதா அவரது தாயார் முத்து லட்சுமி ஆகியோர் மீது ராமேஸ்வரம் போலீஸ் எஸ்.ஐ., ஜெனிபர் ராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









