இன்று 21/5/2020 கீழக்கரை அம்மா உணவகத்திற்கு மூன்றாம் முறையாக இலவச உணவு வழங்குவதற்காக. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 70 ஆயிரத்திற்கான காசோலையை கீழக்கரை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் வழங்கினார்.
கீழக்கரை நகரச் செயலாளர் ஜகுபர் உசேன், சுரேஷ், செல்வ கணேசன் பிரபு மற்றும் பலர் உடன் இருந்தார்கள். இதற்கு முன்பு இரண்டு தடவை கீழக்கரை அம்மா உணவகத்திற்கு இலவச உணவளிக்க காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழை நியூஸ் SKV சுஐபு





You must be logged in to post a comment.