கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

கீழக்கரை சாலைதெருவைச் சேர்ந்த முஹம்மது சலீம் மகன் ரய்யான்(4). இச்சிறுவனை கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் சுற்றி திரிந்த நாய் ஒன்று கடித்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை நகராட்சியால் ஒருசில நாட்கள் கீழக்கரை முழுவதும் சுற்றிதிரிந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினர். ஆனால் சிறுவனை கடித்த நாய் தப்பிச் சென்றது. பல நாட்களாக நாய்பிடித்தவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நாய் போட்ட குட்டிகள் மட்டும் அப்பகுதியில் சுற்றி திரிந்தது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறுவனை கடித்த அதே நாய் மீண்டும் சிறுவனின் வீட்டின் அருகே மீண்டும் சுற்றி திரிவதுடன் கடந்த இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் வளர்த்து வந்த ஒரு ஆட்டையும் 2 கோழிகளையும் கடித்து குதறி சாகடித்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்களும் சிறுவர்களும் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

எனவே சிறுவனை கடித்த நாயை உடனே பிடிப்பதற்கும் மேலும் தெருக்களில் பரவலாக சுற்றி திரியும் நாய்களையும் பிடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக நம் இணையதளத்தில் பல செய்திகள் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது..
https://keelainews.in/2017/01/24/straydog-240117-01/

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









