தோட்டத்திற்கு வந்த பாம்பை கடித்து குதறிய நாய்கள்

கோவை அருகே, தோட்டத்தில் நுழைந்த பாம்பை வளர்ப்பு நாய்கள் ஆக்ரோஷமாக கடித்துக் குதறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபம் பூங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர், தனது குடும்பத்தினரோடு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அத்துடன், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக மூன்று நாய்களையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி, தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் வெட்டும் பணி நடந்துள்ளது. சிவபிரகாஷின் தந்தை ராமலிங்கம் அந்த பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, மஞ்சள் சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது.இதை கவனித்த மூன்று நாய்களும் அந்த பாம்பை துரத்திச் சென்றுள்ளன. நாயிடமிருந்து தப்பிக்க நினைத்த பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்றுள்ளது. தொடர்ந்தும் அந்த பாம்பை விரட்டிய நாய்கள், புதருக்குள் புகுந்த பாம்பை வெளியே இழுத்து வந்தன. தொடர்ந்து அவைகள் ஆக்ரோஷமாக கடித்துக் குதறியதில், சாரைப்பாம்பு உயிரிழந்தது.இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!