கீழக்கரையில் தெரு நாய்களின் தொல்லை என்பது முடிவில்லாத விசயமாக தொடர்ந்த கொண்டிருக்கிறது. கீழக்கரையில் கடந்த வருடம் வெறி நாய் கடித்து உயிரிழந்தான், பின்னர் அதைத் தொடர்ந்து ஒரு பெண் மற்றும் இன்னும் சில் பொியவர்கள் நாய் கடிக்கு ஆளானார்கள். அதைத் தொடர்ந்து கீழ்க்கரையைில் உள்ள சமூக அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் புகார் அளித்ததை தொடர்ந்து சில காலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் முழுமை பெறாமலே நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
மீண்டும் கீழக்கரையில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இரவ நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் தொழுகை மற்றும் இன்ன பிற காரியங்களுக்காக வெளியில் செல்பவர்கள் மிகவும் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த வருடங்களில் நடந்தது போல் மீண்டும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன்னர் நகராட்சி விழித்துக் கொண்டு நடவடிக்கைகள் எடுத்தால் நல்லது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் இன்று (27/11/2018) அதிகாலை எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்.
செய்தி:- SVS.அழகு மரைக்கா..



You must be logged in to post a comment.