கீழக்கரையில் தொடரும் பிரச்சினைகளில் ஒன்று தெருநாய்களின் அட்டுழியமும். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல், யாராவது பாதிக்கப்படும் பொழுது மட்டும் வேக வேகமாக சில நாய்களை அப்புறப்படுத்திவிட்டு, நகராட்சியால் தொடர் முயற்சி எடுக்காத காரணத்தால் தெருநாய் அட்டுழியம் ஓழிந்தபாடில்லை.
இந்த தெருநாய்களின் தொந்தரவு சம்பந்தமாக ஊர் ஜமாத் தார்கள், பல்வேறு சமூக அமைப்புகள், கட்சியினர், சங்கங்கள் என பலரும் கோரிக்கை எதிர்ப்புகள் என
வலுத்ததும் நகராட்சியினர் கண்துடைப்பாக நடவடிக்கை எடுப்பதும், பின்னர் நிதி நிலைமை மற்றும் பல காரணங்களை கூறி நிறுத்திவிடுகின்றனர்.
சமீபத்தில் கடற்கரை பகுதியில் ஆட்டுகுட்டியை கவ்வி சென்ற நாய், பின்னர் பொதுமக்களை கடிக்க தொடங்கியுள்ளது. ஆகையால் நகராட்டி இத்தெருநாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தகவல்: மக்கள் டீம்


You must be logged in to post a comment.