நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்..

நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்..

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர்.செந்தில்குமார் கதிரியக்க பாதுகாப்பு கவச உடை கண்டுபிடிப்பை பாராட்டி இந்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித்துள்ளது இதை கேள்விப்பட்ட மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா. Dr. ஆ. மாயகிருஷ்ணன் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் .Dr இரத்தினவேல் தலைமையில் மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்கள் . மேலும் மருத்துவர் செந்தில்குமார் இதுவரை 40க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார் என்பது மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பதே சரியாகும், மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் செந்தில்குமார் தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளித்து வருகிறார். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மருத்துவமனையாக கருதப்படும் நமது ராஜாஜி மருத்துவமனைக்கு பெருமை சேர்த்து வரும் முதல்வர் அவர்களுக்கும் மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கும் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தோம், இந்நிகழ்வில் திருமங்கலம் சமூக ஆர்வலர் கார்த்திக் மற்றும் ஸ்ரீதரன் கலந்து கொண்டனர்..

செய்தியாளர், வி.காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!