தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சமத்துவ பொங்கல் விழா அரசு மருத்துவர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் மருத்துவர் கோவிந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மனை பணியாளர்கள் இணைந்து ஆண்டு தோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 11.01.2025 இன்று நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.



இவ்விழாவில் மருத்துவமனை பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளும் நடந்தது. விளையாட்டுப் போட்டிகளில் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெஸ்லின், மருத்துவர்கள் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் மருத்துவர் கோவிந்த் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சமத்துவ பொங்கல் விழாவில் உறைவிட மருத்துவர் செல்வபாலா, குழந்தைகள் நல மருத்துவர் கீதா, அண்மையில் ஓய்வு பெற்ற மருத்துவர் லதா, சொர்ணலதா, மணிமாலா, திருமலை குமார், ராஜலஷ்மி, மாரிமுத்து, முத்துக் குமாரசாமி, நிர்மல், முத்து ராமன், செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, வசந்தி, செவிலியர்கள் சீதா, தலைமை மருந்தாளுனர் ராமச்சந்திரன், கோமதி, சங்கர நாராயணன் ஜெயா, சுப்புலட்சுமி, தலைமை ஆய்வக நுட்புனர் ஹல்க், நுண்கதிர் வீச்சாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
மேலும், கடந்த வருடம் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தமிழகத்தில் சுத்தம் சுகாதாரத்தை மேம்படுத்தும் காயகல்ப் குறியீட்டில் முதலிடம் பெற்று ரூபாய் 25 லட்சத்தை தட்டிச் சென்றது. NQAS என்ற தேசிய தர குறியீட்டில் தேசிய தரச் சான்று பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முஸ்கான் மற்றும் லக்ஷயா தேசிய தர குறியீட்டில் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.
அதே போன்று, 10.01.2025 அன்று நடந்த விழாவில், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்த மற்றும் அதிக அளவில் மருத்துவ மனைக்கு வருமானம் ஈட்டி கொடுத்த வகையில், முதல் ஐந்து மருத்துவ மனைகளில் ஒன்றாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு, மருத்துவ மனையின் நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களின் ஒற்றுமையும், கடமை உணர்ச்சியுமே காரணமாகும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.