டிஎன்டி ஒற்றைச்சான்றிதழே என் இலக்கு.உசிலம்பட்டி அருகே கிராமம் கிராமமாக மந்தைப்பிரச்சாரத்தில் கலக்கும் சுயேட்சை வேட்பாளர் தியாகராஜன் பேட்டி.

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அனைத்து கள்ளர் கூட்டமைப்பைச் சார்ந்த தியாகராஜன் போட்டியிகின்றார்.தேர்தல் ஆணையத்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் பேட் சின்னத்துடன் துண்டு பிரசுரங்கள் அடித்து கிராமம் கிராமாகச் சென்று மந்தையில் அமர்ந்திருப்பவர்களிடம் டிஎன்டி சான்றிதழ் என்றால் என்ன அது பெறுவதன் அவசியம் குறித்தும் மக்களிடம் விளக்கி தனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் டிஎன்டி சான்றிதழ் நிச்சயம் பெற்றுத்தருவேன் எனக்கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்.இவருடைய மந்தைப்பிரச்சாரம் கிராம மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.மேலும் கூட்டமாக அமர்ந்திருக்கும் பெண்களிடமும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் கிராம மக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை டிஎன்எ சான்றிதழ்.அந்த டின்டி ஒற்றைச் சான்றிதழை பெற்றுத் தருவதில் இன்றைய அரசாங்கமும் நiமுறைப்படுத்தக் கூடிய அரசாணையை வெளியிடாமல் நாடகமாக ஓர் அரசாணை வெளியிட்டுள்ளனர்.இந்தப் பகுதி ஆதரவோடு தேனி பாராளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.என்னுடைய வாக்குறுதி பற்றி மக்களுக்கு தெரியும.; பொய்யான வாக்குறுதிகளை தந்து நாடகமாடும் ;.அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் முழுமயான கோரிக்கையான டிஎன்டி ஓற்றைச்சான்றிதழ் மட்டுமல்லாது இந்தியாவில் வாழும் சீர்மரபினருக்கு அந்தந்த மாநிலங்களிலேயே அரசு டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டுமென தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளேன்.இப்பகுதி மக்களும் எனக்கு ஆதரவு கண்டிப்பாக தருவார்கள்.என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகின்றேன் எனக் கூறினார்.

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!