திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பேருந்து நிறுத்தம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்
அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன் தலைமையில் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா மற்றும் ஒன்றிய கழக செயலாளர் நாகேஸ்வரன் ஆகிய முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினரும் கழக மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு திமுக கழகம் செய்த நான்காண்டு சாதனைகளைப் பற்றி சிறப்பு உரையாற்றினார். இக்கூட்டத்தில்
இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பா ரகு , தலைமை கழக பேச்சாளர் வில்வ சக்திநாதன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்
சங்கு முத்துராமலிங்கம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி உட்பட கழக மாவட்ட ஒன்றிய நகர் நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.