தமிழக அரசின் கடுமையான சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி இராமநாதபுரம், பரமக்குடி , இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சி அலுவலகங்கள் முன் இன்று (27.7.18) ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம் பி ., பவானி ராஜேந்திரன், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல், மாநில இலக்கிய அணி துணை செயலர் போஸ், மாநில வர்த்தக அணி துணை செயலர்கள் முகவை கிருபானந்தம், ராமர், நகர் செயலாளர் கார்மேகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செயலர் எஸ்.ஏ. பஷீர் அகமது தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் சங்கு முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் பொறுப்பாளர் கே.இ.நா சர் கான் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி முன்னிலை வகித்தார். பரமக்குடி நகராட்சி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செயலர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். முன்னாள் எம.எல்.ஏ., திசை வீரன் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் ஒன்றிய செயலர் பூபதி மணி, பரமக்குடி ஒன்றிய செயலர் ஜெயக்குமார், நயினார் கோவில் ஒன்றிய செயலர் ரவி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அருள் பால்ராஜ். மாவட்ட வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவர் வேலுச்சாமி, ஆர். எஸ் மங்கலம் ஒன்றிய முன்னாள் செயலர் நல்ல சேதபதி, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஜீவானந்தம், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அய்யனார் என்ற ராமசுப்ரமணியன், மண்டபம் நகர் செயலர் ராஜா, மண்டபம் பேருராட்சி முன்னாள் துணை சேர்மன் நம்புராஜன், முன்னாள் கவுன்சிலர் பூவேந்திரன் இராமேஸ்வரம் முன்னாள் கவுன்சிலர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பபட்டது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












