கீழக்கரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக பஸ் மறியல் போராட்டம்..

தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மக்களுக்கு சுமையேற்றும் வகையில் பஸ் கட்டணம் தமிழக அரசால் உயர்த்தப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் கண்டனக்குரல் எழும்பியது. அதைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று கீழக்கரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபட்டனர். இப்போராட்டம் கீழக்கரை திமுக நகரச் செயலாளர் SAH பசீர் தலைமையில் கீழக்கரையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் தோழமை கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பல கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் விடுதலைசிறுத்தை கட்சியை சார்ந்த அற்புதக்குமார், ராஜேஸ்குமார், ஜகுபர் மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்டனர்.

இம்மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் புதிய பேரூந்து நிலையம் அருகே உள்ள கீழக்கரை வெங்கடேஸ்வரா மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!