இராமநாதபுரம் :
இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூர் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று நடந்தது. பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, முஹமது மீரா சாஹிப், வாசிம் அக்ரம், மூத்த முன்னோடிகள் அப்துல் ஓசீது, முஹமது அலி ஜின்னா, அவைத்தலைவர் முருகானந்தம், பொருளாளர் சீனி மீரா ஸா, வார்டு செயலாளர்கள் கஜினி முஹமது, ஜியாவுதீன், நகர் மீனவரணி செயலாளர் ஆசாத், மற்றும் அயூப் கான், ராஜ்குமார், களஞ்சியராஜா, ஷேக் ஜமாலுதீன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வெள்ளைச்சாமி, துணை அமைப்பாளர் இளையராஜா, உள்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.