மதுரை: டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

தமிழகம் முழுவதும் இன்று (07/05/2020)டாஸ்மாக் கடை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும், திமுகவினர் தனது வீட்டு வாசலில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிர்ப்பை காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழக அரசின் இந்த முடிவை கண்டித்து மதுரை தெற்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் கூத்தியார்குண்டு கிளை திமுகவினர் மற்றும் தோழமை கட்சியினர் அனைவரும் அவரவர் வீட்டு வாசலின் முன்பு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கிளை பொறுப்பாளர்கள் ராசு, ராஜாகண்ணன், அய்யங்காளை, திருச்சங்கு, தனசீலன் மற்றும் தெற்கு ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் அழகுராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!