மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இலக்கை தமிழகம் கடந்து பல ஆண்டுகளாகி விட்டது : கனிமொழி கருணாநிதி எம்பி பெருமிதம்..

இராமநாதபுரம் : முகவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. திமுக துணை பொதுச்செயலர்  கனிமொழி கருணாநிதி எம்பி ,  பால்வளத்துறை அமைச்சர்  ராஜகண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தொழில் துறை அமைச்சர் ராஜா, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ, மார்க்கண்டேயன் எம்எல்ஏ ((விளாத்திகுளம்), தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மேயர்கள்  சங்கீதா இன்பம் (சிவகாசி), ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர், முகவை மண்டல பொறுப்பாளர் விஜய கதிரவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி கருணாநிதி எம்பி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆக்கபூர்வ செயல்பாடுகள் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடியதாக உருவெடுத்துள்ளது. பொய்களை உருவாக்கும் தொழிற்சாலையாகபாஜக மாறி உள்ளது. மக்கள் இடையே பிரிவினைவாத போக்கை தொடர்ந்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. பொய் பரப்பும் இயக்கத்தை எதிர்த்து திமுக போராடி வருகிறது. திமுக ஒரு மாநில கட்சியாக இல்லை. நாட்டின் கருத்தியலை உருவாக்கும் தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார். தமிழகத்தை விட்டு பிற மாநிலம் செல்லும் போது தான் தமிழகம் எவ்வாறு முன்னேறி உள்ளது என்பதை காண முடிகிறது. திராவிடத்தால் தமிழகம் உயர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் திராவிடத்தால் தமிழகம் கம்பீரமாக உள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் தொடர்புடைய நபர் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தற்போது தடுத்திருக்கலாம்?  மகா விஷ்ணுவின் சுய ரூபத்தை தகவல் தொழில் நுட்ப அணி தோலுரித்து காட்டியது. நம் கருத்தை தடுத்து நிறுத்த எவருக்கும் தகுதியில்லை. புதிய கல்வி கொள்கையை உருவாக்கும் தகுதி பாஜகவிற்கு இல்லை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை இலக்கை தமிழகம் என்றே எட்டி விட்டது. உயர் கல்வி கற்பதன் விழுக்காடு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். உயர் கல்விக்கான புதுமை பெண் திட்டம், தவப்புதல்வன் திட்டம் அனைவரும் படிக்க துணையாக உள்ளது. முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத மக்களை தேடி மருத்துவம் தமிழகத்தில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!