இராமநாதபுரத்தில் கொரானா தொற்று பாதித்தோருக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திமுக., கூட்டணி ஆட்சியரிடம் மனு..

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரானா தொற்று பாதித்தோர் 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய குடிநீர், முகக் கவசம், அளவில்லா சாப்பாடு வழங்கவில்லை. சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து தர வில்லை என கூறி கொரானா தொற்று பாதித்தோர் கடந்த சில நாட்களுக்கு முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம்,  திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர்

இன்று (23.6.2020) கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.தெய்வேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் வழக்கறிஞர் முருகபூபதி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.சி.ஜீவானந்தம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கூறுகையில், கொரானா தொற்று பாதித்தோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைகளில் 800 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. சில கல்லூரிகளிலும் மருத்துவ வசதி செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். வெளியூர்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வருவோருக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்திய பின் மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும். கொரானா அதிகம் பரவி இருப்பதால் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அரசு பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடித்து பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!