இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவில் 32 ஆண்டுகளுக்கு பின் மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டதற்கு கட்சியின் பலதரப்பட்ட தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது முன்னாள், இன்னாள் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று வரும் மாவட்ட செயலாளருக்கு தொண்டர்கள் திரளான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவில் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் திமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வருகிறார். 32 ஆண்டுகளுக்கு பின் புதிய மாவட்ட செயலாளர்
நியமிக்கப்பட்டுள்ளது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொண்டர்களும் திரளாக கமுதியில் உள்ள மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்தின் இல்லத்திற்கே நேரில் சென்று மாலைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நியமிக்கப்பட்டுள்ளது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொண்டர்களும் திரளாக கமுதியில் உள்ள மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்தின் இல்லத்திற்கே நேரில் சென்று மாலைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் புதிய மாவட்ட செயலாளராக தலைமை அறிவித்த பின் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ராமநாதபுரத்திற்கு நேரில் வந்து முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.திவாகரன், முன்னாள் எம்பி, பவானி ராஜேந்திரன் உட்பட கட்சியின் முத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், தற்போது பணியாற்றி வரும் கட்சியின் நகர், ஒன்றியம், மாவட்ட நிர்வாகிகள் என பலரையும் ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம், பரமக்குடி ஆகிய ஊர்களுக்கு நேரடியாக சென்று சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்து தகுந்த ஆலோசனைகளை கேட்டறிந்து வந்தார். தொடர்ந்து கமுதியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்தை அவரது வீட்டிற்கு தினமும் நூற்றுகணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ காதர்பாஷா என்ற வெள்ளைச்சாமியின் மகன் ஆவார். இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சிப்பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த தொண்டர்கள் தற்போது நிர்வாகி மாற்றத்தால் மீண்டும் கட்சிப்பணிகளில் துடிப்புடன் ஆர்வம் காட்டிவருவது கண்கூடாக தெரிகிறது என பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














தற்போதைய மாவட்ட செயலாளர் சகோதரர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு, கட்சி பனியில் ஒத்துவராத நிர்வாகிகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து நம்மாவட்ட தி மு காவை காப்பாற்று மாறு கேட்டுக்கொள்கிறேன்
இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் மதிப்பு மிக்க அண்ணன் திரு.SKV.முத்துராமலிங்கம் BA,அவர்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்தி வரவேற்கிறோம்