தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் ஆவுடையானூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கலை கதிரவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜே.கே.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் தொகுப்புரை ஆற்றினார். திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
மருத்துவர்கள் தமிழரசன், அன்பரசன், செல்வ ரெங்கராஜு, தமிழருவி, அரவிந்த் மேனன், விக்னேஷ், அருள் விஜயகுமார், தேவிஸ்ரீ, கௌதமி உள்ளிட்டோர் பங்கேற்று பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். இலவச மருத்துவ நிகழ்வில், 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள் மருந்துகள், மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
இம்முகாமில் மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் இரா.சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, தர்மராஜ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, மருத்துவ அணி அமைப்பாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சேக் முகமது, சுரண்டை நகர செயலாளர் கணேசன், நிர்வாகிகள் சுப்பிர மணியன், ரவி, செந்தூர் முருகன், ராஜேந்திரன், சமுத்திர பாண்டி, தங்கராஜ், டால்டன், முத்துகுட்டி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

