பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பொள்ளாச்சியில் கடந்த 2019 நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில், தென்காசி நகர திமுக செயலாளர் ஆர். சாதிர் முன்னிலையில், திமுகவினர் பட்டாசு வெடித்து நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏஆர்எம். அழகு சுந்தரம், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன் உட்பட மாவட்ட, நகர திமுக நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்