அதிமுக அரசை கண்டித்து மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ராமேஸ்வரத்தில் நடந்தது. இராமேஸ்வரம் நகர பொறுப்பாளர் நாசர் கான் தலைமை வகித்தார். தலைமைக்கழக பேச்சாளர் போடி காமராஜ் பேசினார். தமிழக அரசின் அனைத்து துறை களிலும் அரங்கேறிய ஊழல்களை மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பட்டியலிட்டார்.
இந்த நிகழ்வில் மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் 100 பேர் திமுக வில் இனணந்தனர். முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் சுப தங்கவேலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச்செயற்குழு உறுப்பினருமான திசைவீரன், மாநில வர்த்தக அணி துணை செயலர் இராமர், மாநில தீர்மானக் குழு துணைதலைவர் சுப.திவாகரன் , மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், திருவாடானை தெற்கு ஒன்றிய செயலர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலர் கருப்பையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரகு, பொதுக்குழு உறுப்பினர் அருளானந்து, பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலர் ஜெயக்குமார், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலர் பூபதிமணி, நயினார்கோயில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி, திருப்புல்லாணி ஒன்றிய செயலர் புல்லாணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மனோகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஜய்கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பசும்பொன் தனிக்கொடி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் பிரவின், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகரத்தினம், பிரவின்தங்கம், கீழக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் ஷண்முகம், ராமு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், வாசுதேவன், போஸ், புதுக்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலர் மனோகரன், முனியசாமி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாதன், இராமநாதபுரம் நகரா கட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அய்யனார் (எ) ராமசுப்ரமணியன், குமார், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபால், முபாரக், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










