மண்டபம் திமுக பேரூர் கழக செயலாளர் அமைச்சரிடம் கோரிக்கை மனு !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை செய்தார். அவரே நேரில் சந்தித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுக மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரஹ்மான் மரக்காயர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியதாவது : மண்டபம் பேரூராட்சியில் நிரந்தரமான பேருந்து நிலையம் இல்லை மீன்வளர்ச்சி துறைக்கு சொந்தமான இடம் உண்டு அந்த இடத்தை பேருந்து நிலையத்திற்க்கு வழங்கினால் மண்டபம் மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள் அந்த இடத்தில் பேருந்து நிலையம் வேண்டும் என்று பொதுமக்கள் வியாபாரிகள் சங்கம் நகர் வர்த்தக சங்கம் மீனவர்சங்கங்ளின் கோரிக்கையாக உள்ளது எனவே தாங்கள் முயற்சித்து அவ்விடத்தை தேர்வு செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!