இராமநாதபுரம் : திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைத்தளப் பயிற்சி நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா வரவேற்றார். சமூக செயற்பாட்டாளர் சூர்யா கிருஷ்ணா மூர்த்தி, சமூக தளத்தில் பணியாற்றுவது குறித்து அன்பகம் விக்னேஷ் ஆனந்த் பயிற்சி அளித்தனர். திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஜி.பி. ராஜா பேசினர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, சண்.சம்பத்குமார், குமரகுரு, கோபி நாத், சத்தியேந்திரன், தவ்பீக் ரஹ்மான், ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர் கார்மேகம், ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக செயலாளர் பிரவீன் தங்கம், மண்டபம் மத்தி, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், பிரவீன், திருபுல்லாணி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் நாகேஸ்வரன், உதயக்குமார், மண்டபம் பேரூராட்சி செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர், ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சி செயலாளர் கண்ணன், கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹமீது சுல்தான் உள்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.