நீட் தேர்வு ரத்து கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி உண்ணாவிரதம்..

இராமநாதபுரம், ஆக.20-

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு, தமிழக ஆளுநரை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் அரண்மனை முன் உண்ணாவிரத அறப் போராட்டம் நடந்தது. பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:
தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. 2024 நாடாளுமன்ற தேர்தல்  தோல்வி பயத்தால் பிரதமரின் முகம்  கடந்த சில நாட்களாக சோகமாக உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக யாரை நிறுத்தினாலும் திமுகவால் தோற்கடிக்கப்படுவார். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்கு அனுமதி அளித்ததும் திமுக அரசு தான். பாஜகவின் கொத்தடிமையாக அதிமுக செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ, இளைஞரணி மாநில துணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா, மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி,முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன்,
மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆசிக் ரஹ்மான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா, நகர் செயலாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம், மண்டபம் ஒன்றிய (வேதாளை) கவுன்சிலர் தௌபீக் அலி, மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக முன்னாள் செயலர் ஜீவானந்தம்
உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!