விருதுநகர் மாவட்டத்தில் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதி அளிக்க விருதுநகர் மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்…

விருதுநகர் மாவட்ட முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் தங்கபாண்டியன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்தனர்.

அப்போது அவர்கள் வருகிற 6ம் தேதியில் இருந்து மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கடைகள் திறப்பதற்கு ஊரடங்கு தளர்வு விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கடைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட நேரத்திலாவது அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்  கூறியதாவது, “ வருகிற 6-ந் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்வு விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். வருகிற 6-ந் தேதிக்கு பின் கடைகளைத் திறக்க குறிப்பிட்ட நேரத்தில் ஆவது அனுமதிக்க வேண்டும் என எங்களுடைய ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். கடைகளை திறக்க அனுமதி அளிக்க ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்“ என அவர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!