இராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் இன்று (16/03/2021) நிகழ்வின் தொடக்கமாக சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணிகளை தொடங்கினார்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு வருகை தந்தார். கூட்டமைப்பு ஜமாஅத் தலைவர் செயலாளர் நிர்வாகிகள், மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும் ஆதரவு கேட்டு உரையாற்றினார். பின்னர் நகரிலுள்ள பள்ளிவாசல்களுக்கும் சென்று ஓட்டு சேகரிப்பதை தொடர்ந்து பல வேறு சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
இவரவருகையின் போது கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேட்பாளர் வருகையின் போது கீழக்கரை திமுக மற்றும் ஆதரவு கட்சி நிர்வாகிகள் வெடி வெடித்து வரவேற்றனர்.










You must be logged in to post a comment.