திமுக இளைஞரணி பைக் பேரணி தென்காசி பகுதிக்கு வந்தடைந்தது. இந்த பேரணிக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் மற்றும் நகர செயலாளர் சாதிர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி திமுக 2-வது இளைஞரணி மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு சிறப்பாக அமைய வேண்டி கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை பைக் பேரணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த பைக் பேரணி தென்காசி வந்தடைந்தது.
தென்காசி நகர எல்லையான ஆசாத் நகரில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், நகர செயலாளர் சாதிர் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன், நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், மைதீன், சுப்பையா, ஐவேந்திரன் தினேஷ், கிருஷ்ணராஜ், சுப்பிரமணியன், முகமது அப்துல் ரஹீம், உதயநிதி நற்பணி மன்ற மாநில பொருளாளர் ராஜா, மாணவரணி ரமேஷ், பொன்செல்வன், மாவட்ட மருத்துவ அணி மாரிமுத்து, பொறியாளர் அணி தங்கபாண்டியன், தலைமை கழக பேச்சாளர் கடையநல்லூர் இஸ்மாயில், நகர நிர்வாகிகள் பால்ராஜ், ராம்துரை, ஷேக் பரீத். முகைதீன் பிச்சை, இசக்கிமுத்து, பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், பைக் பகுதி தலைவர் ஜெயக்குமார் பாண்டியன், டி.யன். அர்ச்சுனன், சுங்காதரன், தகவல் தொழில்நுட்ப அணி சுப்பிரமணியன், கரிகாலன், இசக்கிரவி, பொத்தை முருகன், சன் ராஜா, சபரி சங்கர், அருணாசலம், நம்பிராஜன், முபாரக், மாணவரணி மைதீன், முரளி, ராஜன், மணிராஜ், கோதரி, ரெசவு மைதீன், ஹாமீம், கரீம், மஜீத், அஷ்ரப், மாரியப்பன், வேல்ஐயப்பன், சைலப்பன், நசீர், முகமது ஷேக், பாலகிருஷ்ணன், செய்யது அலி, சேகுல் லாசா. பழனி, சண்முகநாதன், செய்யது ஆபில், நாகூர் மீரான், சுலைமான், தேவதாஸ், ஆல்வின், செய்யது பட்டாணி, அமீர், செங்கோட்டை லியாகத் அலி, சுடலை, சுந்தரபாண்டியபுரம் இசக்கிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












