விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள தளவாய்புரம் பகுதிகளில் நைட்டி, தையல் உற்பத்தியை நம்பியே பெரும்பாலான குடும்பங்கள் உள்ளது. இந்தப் பகுதியில் குடிசை தொழிலாக நைட்டி, பாவாடை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் இந்த பகுதியில் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழக்கூடிய பொதுமக்களுக்கு இராஜபாளையம் திமுக ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் அவர்கள் சொந்த செலவில் ரூ.10 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து 5- தினங்களாக ஒவ்வொரு கிராமமாக நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று நல்ல மங்கலம், மீனாட்சிபுரம், மேல வரகுணராமபுரம் பகுதிகளில் வழங்கினார். இதில் பொதுமக்கள் அனைவரும் சமூக விலகளை கடைபிடித்து வட்டத்துக்குள் நின்று நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்









You must be logged in to post a comment.