ஸ்ரீதர் வாண்டையார், கருணாஸ் உள்ளிட்ட 8 கட்சியின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதியளித்தனர். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர். இதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ”முக்குலத்தோர் புலிப்படை” கட்சி தலைவர் கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் கருணாஸ் உறுதி அளித்தார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள், ‘தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் நிறுவனர்-தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், ‘அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின்’ நிறுவனர்-தலைவர் திருச்சி பொன்.முருகேசன் மற்றும் நிர்வாகிகள், ‘இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச் சங்கத்தின்’ அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பேரறிவாளன் மற்றும் நிர்வாகிகள், ‘தமிழ் மாநில தேசிய லீக்’ கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









