மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழகத்தின் சார்பில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் திமுக தலைமை செய்தி தொடர்புகுழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.,இந்த கூட்டத்தில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன்.,
மதுரையில் எய்ம்ஸ்க்கு செங்கலை நட்டு வைத்துவிட்டு சென்றார் மோடி, ஏன் கட்டவில்லை என்றால் ஜப்பனிலிருந்து பணம் வரவில்லை என சொல்கிறார்கள், ஆனால் அதற்கு பின் 7 இடங்களில் எய்ம்ஸ் கட்டி முடித்துவிட்டார்கள்.,
வேறு வேறு மாநிலத்தில் எய்ம்ஸ் கட்டப்பட்டு விட்டது, தமிழ்நாட்டுக்காரன் தான் இழிச்ச வாயன் என நினைக்கிறார்களா?.,
ஏன் நாங்கள் பாஜக-வை எதிர்க்கிறோம், அக்கட்சி அடிப்படையிலேயே மனிதர்களை பிரித்தாலும் கட்சி என்பதால் தான்.,
நாமெல்லாம் சமத்துவமாக வாழ்ந்தவர்கள், நாம் சகோதரர்களாக வாழ்கிறோம், பாஜக வந்தால் குலப்பம் வந்துவிடும் என்பதால் தான் மக்கள் வேண்டாம் என்கிறார்கள்.,இப்போது கூட திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக இருக்கும் பலக்கத்தை யார் குலப்பத்தை உருவாக்கினார்கள், அதை இன்று தேவையில்லாமல் தூண்டி விட்டு திமுகவிற்கு அவ பெயர் உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.,மேலும் சென்னையில் திமுக கொடியுடன் அதிமுகவினர் பெண்களை துரத்தி சம்பவம் அதே போல தான், எதையாவது சொல்லி இந்த கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த நிலைக்கிறார்கள் ஆனால் திமுக மக்கள் நலனே நம் நலன், மகளீர் நலனே நம்முடைய நலன் என்று பல்வேறு திட்டங்களை கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் உருவாக்கி தந்து கொண்டிருக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின்.,ஒவ்வொரு திட்டத்தையும் எண்ணி செயல்பட்டு வரும் அரசை முடக்க வேண்டும் என எண்ணி இந்த அரசுக்கு மட்டும் பணம் தராத அரசாக மத்திய அரசு இருக்கிறது.,
மக்கள் எதிரியாக பாஜக இருக்கிறது., மனித நன்மையில் அக்கறை இல்லாமல் மத பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போது இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா என்ற எண்ணம் தான் வருகிறது.,தனக்கு பிடிக்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்காதே, நம்மை ஏற்றுக் கொள்ளாத மாநிலத்திற்கு நிதி கொடுக்காதே., என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.,30 ஆயிரம் கோடி நமக்கு கொடுக்கவில்லை 69 ஆயிரம் கோடி இரண்டு பணக்கார்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளார்கள்., மத்தியில் இரண்டு பேர் ஆட்சி செய்கிறார்கள் மோடி, அமித்ஷா இல்லை பாஜக ஒரு ஆட்சி ஆர்எஸ்எஸ் ஒரு ஆட்சி செய்கிறது.,
ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வளர்க்கிறது, பாஜக இரண்டு பணக்காரர்கள் அதானி, அம்பானிக்கு புரோக்கர் வேலை பார்க்கிறது என பேசினார்.,
உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் எம்பி பழனி எஸ் வி எஸ் முருகன் ஜி அஜித் பாண்டி செல்லம்பட்டி சுதாகரன் சேடபட்டி ஜெயச்சந்திரன் சங்கரபாண்டி செல்வ பிரகாஷ் ஏழுமலை ஜெயராமன் ஆகியோர முன்னிலை வைத்தனர். கூட்டத்தில்
தலைமைக் கழக செய்தி தொடர்பு குழு தலைவர் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் தலைமைக் கழகப் பேச்சாளர் குடந்தை ரமேஷ் திமுக கழக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாறறினர். இந்தக் கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் சிவனாண்டி மாவட்ட பொருளாளர் கொம்பாடி தங்கம் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணகுமார் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி குபேந்திரன் இலக்கிய அணி விஜய தகவல் தொழில்நுட்ப அணி ஜெயச்சந்திரன் மூத்த நிர்வாகிகள் டிசி கணேசன் கல்யாணி வாலாந்தூர் பார்த்திபன் காளிதாஸ் மகேஸ்வரன் துரை அணி துணை அமைப்பாளர்கள் சரவெடி சரவணன் அலெக்ஸ் பாண்டியன் பிரவீன் நாத் நகர நிர்வாகிகள் உதய பாஸ்கரன் தேவி ரமேஷ் அழகர் ஜெயபிரகாஷ் பழனி குமார் மகாலிங்கம் வீரா தினேஷ் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவை தலைவர சி எம் வி சின்னன் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.