மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,இந்நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்.,ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை ஏனென்றால் ஆளும் பாஜகவிற்கு மெஜாரிட்டி இல்லை, மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது.,சட்டத்தை கண்மூடித்தனமாக கொண்டு வருகின்றனர், ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவிற்கு சாத்தியமான தேர்தல் இல்லை 18 கட்சிகள் இந்தியாவில் எதிர்க்கின்றனர்.,திமுக எதிர்த்து வாக்களித்துள்ளது, ஆனால் அதிமுக ஆதரித்து வாக்களித்துள்ளது, இதிலிருந்தே அதிமுக பாஜக மறைமுக கூட்டணியில் உள்ளனர் என்பது இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமே உணர்த்தியுள்ளது.,நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய எங்களை தான் காவல்துறை அதிகாரிகள் பிடித்து தள்ளினார்களே தவிர நாங்கள் யாருடனும் மல்லுக்கட்டவில்லை, ஆனால் தேவையில்லாமல் எதிர்கட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்., நிச்சயமாக மக்கள் இதற்கு உரிய தண்டனையை வரும் காலகட்டத்தில் கொடுப்பார்கள்.,ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை, நடக்கவும் நடக்காது,ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் உள்ளனர், எதிர்கட்சியை மதிக்கவில்லை, ஜனநாயக கடமை ஆற்றவே பாராளுமன்றம் செல்கிறோம், ஒட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என பேசுகிறோம், இரண்டுமே செய்ய முடியாத அளவுக்கு பாஜக அரசு செய்து வைத்துள்ளது என பேசினார்.தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடப்பட்டி மு. மணிமாறன் தலைமையில் தேனி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி முன்னிலையில் சலவைத் தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ் வழங்குதல் மற்றும் மருத்துவ முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 11 பொருட்கள் அடங்கிய தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது. விழாவில் நகர அவைத்தலைவர் சி எம் பி சின்னன் வரவேற்றார். உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தொகுதிப் பொறுப்பாளர் பி செல்லத்துரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன் எம் பி பழனி அஜித் பாண்டி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் டி முத்துராமன் சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வ பிரகாஷ் ஏழுமலை பேரூர் செயலாளர் ஆர் பி ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி. சரவணகுமார் மாநில சுற்றுச்சூழல் அணி எம் ஆர் அருண் மாவட்ட துணைச் செயலாளர் சிவனாண்டி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி வி. குபேந்திரன் மாவட்ட விவசாய அணி பி டி மோகன் முன்னாள் நகரச் செயலாளர் எஸ் தங்கமலை பாண்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் க. மூக்கையா மாவட்ட நிர்வாகிகள் சரவெடி சரவணன் வி கல்யாணி டி சி கணேசன் வாலாந்தூர் டி.பார்த்திபன் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம் நகர நிர்வாகிகள் எம் உதய பாஸ்கரன் தேவி ரமேஷ் அழகர் மாவட்ட பிரதிநிதிகள் பழனி குமார் மகாலிங்கம் தினேஷ் நகராட்சி கவுன்சிலர்கள் முருகன் வீரமணி செல்வி சோபனா தேவி நாகஜோதி பிரியா காத்தம்மாள் சுபாகரன் சந்தானம் மாவட்டத் துணை அமைப்பாளர்கள் வினோத் குமார் வழக்கறிஞர்கள் கனிராஜன் விக்னேஷ் மற்றும் வார்டு செயலாளர்கள் மதிவாணன் மணிகண்டன் பால்பாண்டி பிரபாகரன் மணிமாறன் சிதம்பரம் பால்பாண்டி முருகன் நவநீதகிருஷ்ணன் காட்டு ராஜா முருகன் பழனியம்மாள் சுரேஷ் ஜெயக்கொடி பாண்டியன் கர்ணன் ராஜகுரு மற்றும் திமுக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நகர பொருளாளர் து. கா ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் எஸ் கே ஆர் தங்கப்பாண்டியன் செய்திருந்தார்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.