இராமநாதபுரம் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று மாலை நடந்தது. மாவட்ட
அவைத்தலைவர் வ.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பிற்பட்டோர் நலம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆகியோர் பேசினர். சேலம் இளைஞரணி மாநாடு, பொற்கிழி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க டிச.5 -ல் ராமநாதபுரம் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மாவட்ட பொருளாளர் முருகேசன் எம் எல் ஏ,திமுக இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, முன்னாள் அமைச்சர்கள் சுப தங்கவேலன், எஸ். சுந்தர்ராஜ், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம்,தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். அஹமது தம்பி, மாவட்டத் துணைச் செயலாளர் சுஜாதா கணேசன், ஈஸ்வரி கருப்பையா, ஆர்எஸ் மங்கலம் யூனியன் முன்னாள் தலைவர் நல்ல சேதுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


You must be logged in to post a comment.