திமுக சார்பில் 600 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது

கொரோனா கிருமி நோய்தொற்று காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 37 நாளான இன்று வாழ்வாதாரம் இழந்து வாழும் மக்களுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவிகள் வழங்கி வரும் நிலையில் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 600 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புடய அத்தியாவசிய பொருட்களான அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது, திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு இணை செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான குத்தாலம் பி.கல்யாணம் தலைமையில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளருமான குத்தாலம் க.அன்பழகன், நாகப்பட்டினம் மாவட்ட கவுன்சில் தலைவர் மங்கை சங்கர் பேரூராட்சி நகர செயலாளர் சம்சுதீன் மற்றும் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகப்பா முன்னிலையில் 600 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது இதில் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!