துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சென்று விட்டனர்!-பாமக வை பங்கமாய் கலாய்த்த பிரேமலதா விஜயகாந்த்..

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும்.முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.ஆனால் தேமுதிக அப்படி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!