ஆதரவற்றோர் தீபாவளி கொண்டாட்டம் தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் 26-வது ஆண்டு விழாவும், 11-வது தீபாவளி நலத்திட்ட விழாவும் ஆதரவற்றோர், நலிந்தோர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், திருநங்கைகள் உட்பட 250 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நிலையூர் ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணியசாமி அவர்கள் தலைமையிலும், பொற்கூடம் எஸ்.வி.ராணி, ஸ்டார் பில்டர்ஸ் டாக்டர் சித்ரா, அகஸ்தியர் ஹெர்பல் பி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும், நிறுவனர், செயலாளர் செல்வி டாக்டர் பி.விஜயபாரதி வரவேற்புரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினராக சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் எஸ்.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கினார். கார்த்திகேயன், சரவணகுமார், ஆசிரியர் எபனேசர், காவல் ஆய்வாளர் என்.துரைப்பாண்டியன், தொழிலதிபர் காமராஜ், வாய்ஸ் டிரஸ்ட் நிறுவனர் டி.முருகேசன், எஸ்.இராமஜெயந்தி, சண்முகம், ஜோதி அம்மா, குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுபிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழா ஏற்பாட்டினை சித்ரா, கீர்த்தனா, சிவகாமி, ப்ரியா மற்றும் தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்டில் உள்ளவர்கள் செய்தார்கள். ஒருங்கிணைப்பாளர் பி.ரேவதி நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









