லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுப்பதற்கு சமம் காங் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி ஆவேசம்.!

தேவகோட்டையில் தியாகி கே.எம்.சுப்பையா 107 வது பிறந்த நாள் விழா, தியாகிகள் தின விழா கே.எம்‌. எஸ். சிந்தனைச் சோலை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. நிறுவுநர் தெய்வசிகாமணி வரவேற்றார். செயலாளர் துரை தமிழ்ச்செல்வன் அறிக்கை வாசித்தார். இவ்விழாவில் கே.எம்.எஸ். படத்தை திறந்து வைத்து காங். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசுகையில், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை முத்து இவ்விழாவில் பங்கேற்று உள்ளார். பாராட்டுக்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகள் செய்து அதில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நேரத்தில் சில சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. கும்பமேளா மரணங்கள், கள்ளச்சாராய 60 பேர் சாவுகள் போன்றவைகள் வேதனை அளிக்கிறது. சாராயத்தை குடித்து 60 பேர் மரணம் என்பது சாதாரணமானது இல்லை. இதற்காகவா தியாகி கே. எம். சுப்பையா போன்றவர்கள் நாட்டிற்கு தனது வாழ்க்கையை தியாகம் செய்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள். அந்தமான் உட்பட சில பகுதிகளுக்கு சென்றிருந்தேன். அந்த காலத்தில் ஆங்கிலேயர் அடைத்து வைத்திருந்த ஜெயிலை பார்வையிட்டேன் தியாகிகள் அந்தமான் சிறைச்சாலை மிகவும் கொடூரமாக உள்ளது. பெண்களை தூக்கில் போடும் தீவையும் பார்த்தேன். இதையெல்லாம் பார்க்கும் போது தியாகிகள் போராடி பெற்ற சுதந்திரம் வலிமையானது என தெரிகிறது. தற்போது அனைத்து விஷயங்களிலும் லஞ்சம் பெருகி விட்டது. குறிப்பாக ஓட்டு போடுவதற்கு கூட லஞ்சம் வாங்கிக் கொண்டு போடுவது. ஓட்டு போட. லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் அரசியல்வாதிகள், மற்றவர்கள் தவறு செய்தால் எப்படி கேட்க முடியும். ஒருநாள் 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதால் ஐந்து வருடங்கள் கஷ்டப்படுகிறோம். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை லஞ்சம் வாங்கிக் கொண்டு பணம் போட்டு விடுவது நமது நாட்டை அந்நிய நாட்டிற்கு காட்டிக் கொடுப்பது போல் ஆகும். போராடி பெற்ற சுதந்திரம் என்பதை மனதில் வைத்து வருங்காலத்தில் லஞ்சம் இல்லாத சமுதாயத்தை அமைக்க மாணவர்கள் இளைஞர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசினார் அறிவியல் ஆய்வாளர் நெல்லை முத்து பேசுகையில் இன்றைய அறிவியல் வளர்ச்சியை விஷயங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் தனது கவிதைகளில் சொல்லியிருக்கிறார். என்று முத்து பேசினார் நிகழ்ச்சியில் சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் நாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் மீரா உசேன் , வர்த்தக சங்க தலைவர் மகபூபாட்சா, முன்னாள் ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ரத்தினம், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவேதா ஜீவானந்தன் நன்றி கூறினார.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!