கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி முகாம்.!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பொதுமக்களின் குறைகளை குறித்தும் கேட்டறிந்தார். 

மேலும் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேற்படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாகவும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோன்று சிசிடிவி கேமரா வைப்பதன் அவசியம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார்.    

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்ல உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!