பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை !

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில்  காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்ச பணம் பெறுவதாக இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கணக்கில் இருந்து வராத ரூ.1,38,000 பணம்  கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சுரேஷ்பாபு, மேலாளர் , ஹரிஹரன் , தற்காலிக பணியாளர்  சதீஸ், இளநிலை உதவியாளர் , அருளானந்தம் அலுவலக கண்காணிப்பாளர் ஆகிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து (14.06.2024) இன்று காலை பரமக்குடி, சேதுபதி நகரில் தங்கியிருந்த சுரேஷ் பாபு அறையை  சோதனை மேற்கொண்ட  போது கணக்கில் வராத ரூ. 3,02300  பணமும் மற்றும்   முக்கிய அலுவலக ஆவணங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!