கீழக்கரையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் புதிய திட்டம் ! மாவட்ட ஆட்சியர் மக்களை நேரில் சந்திப்பு !!

தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் முதல் முகாமானது கீழக்கரை வட்டத்தில் நாளை 31.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை ஊரில் நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்தல்10.00 மணி முதல் 11.00 மணி வரை தில்லையேந்தல் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுதல் 11.00 மணி முதல் 12.30 மணி வரை இதம்பாடல் ஊராட்சி பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுதல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் – ஆய்வு செய்தல் 02.30 மணி முதல் 4.30 மணி வரை நகராட்சி அலுவலகம், கீழக்கரை அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுகளின் முடிவு குறித்து ஆய்வு கூட்டம் 04.30 மணி முதல் 6.00 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் கீழக்கரை பொதுமக்களுடன் கலந்துரையாடல் மற்றும் மனுக்களை பெறுதல் 06.00 மணிக்கு மேல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை, அரசு மாணவ, மாணவியர் விடுதி, பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்கள், பொது போக்குவரத்து, அரசு காப்பகங்கள், பூங்காக்கள் ஆய்வு செய்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கீழக்கரையில் இரவு தங்கி மறுநாள் காலை 01.02.2024 அன்று 6.00 மணி முதல் 7.00 மணி வரை கீழக்கரை நகராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு செய்தல் குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வு செய்தல் கீழக்கரை நகராட்சி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் 07.00 மணி முதல் 9.00 மணி வரை முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆய்வு செய்ய உள்ளார். இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!