ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் மெத்தன போக்கு ! மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் !!.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்கு ரயில்வே மேம்பாலம் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அருகே சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது அவ்வழியில் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகள் அவசர ஊர்திகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்றவற்றில் செல்லக்கூடிய வர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகின்றது. மேலும் மாவட்டத்தில் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் இவ்வழியில் தான் செல்கிறது .இச்சாலையை சரி செய்யாமல் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனப் போக்கை கையாண்டு வருவதால் மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் கவனம் செலுத்தி போக்குவரத்தும் பொது மக்களும் பாதுகாப்போடு செல்வதற்கு சரி செய்து தர வேண்டும் என்று பெரியார் பேரவை மாவட்ட தலைவர் க.நாகேசுவரன் உட்பட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!