இராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2023-2024-ம் ஆண்டு 11.06.2024 தேதி முதல் 20.06.2024ம் தேதி முடிய (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 1433-ம் பசலி ஆண்டு (2023-2024) கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும் https://cmhelpline.tnega.org/support/iipgcms ஆகிய இணைத்தளம் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக 11.06.2024 முதல் 20.06.2024 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும், பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.