ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் அமைந்துள்ள சேகு ஜலால்தீன் அம்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எஸ் எம் சி மறுக்கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பங்கேற்று சிறப்புரையாற்றி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கொன்னமுத்து அனைத்து பெற்றோர்களையும் வரவேற்று பேசினார். சிறப்பு பார்வையாளராக திருப்புல்லாணி ஒன்றியம் சுமைதாங்கி பள்ளியின் தலைமை ஆசிரியை முனீஸ்வரி பங்கேற்று பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இறுதியாக பள்ளியின் உதவி ஆசிரியர் தஉதுமான் மைதீன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

You must be logged in to post a comment.