கீழக்கரை அருகே மஞ்சுவிரட்டில் காவல்துறை அதிகாரிக்கும், போதை ஆசாமிகளுக்கும் கடும் மோதல்..

கீழக்கரையில் அருகே உள்ள குளபதம் கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்த விழா பாதுகாப்பு பணிக்காக கீழக்கரை சரகம் சார்பு ஆய்வாளர் வசந்த் மற்றும் ஆய்வாளர் திலகவதி மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டுருந்தனர்.

அச்சமயத்தில் மாடு பிடிக்கும் சில இளைஞர்கள் போதையில் இருந்த வண்ணம் அப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த சார்பு ஆய்வாளர் வசந்த் அவர்களை வெளியேறும்படி வலியுறுத்தினார். ஆனால் காவல்துறையின் பேச்சுக்கு கட்டுப்படாமல் வாக்குவாதத்தில் இறங்கினர்.

அதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும், அங்கு போதையில் இருந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சார்பு ஆய்வாளர் வசந்த் மற்றும் காவலர்கள் தடியடி நடத்தினார்கள். இச்சம்பவத்தில் காவல்துறையில் சிலருக்கும் மற்ற 4 நபர்களுக்கு சிறிது காயம் ஏற்பட்டது. காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!